கோவை, விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .இதை யொட்டி கோவைமாவட்டம் முழுவதும் 2,236 சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் கோவையில் இந்து அமைப்புகள் பா.ஜ.க மற்றும் பொதுமக்கள் போலீசாரால் அனும திக்கப்பட்ட இடங்களில் 708 சிலைகளைபிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப் படுகிறது. இதில் முக்கிய ஊர்வலம் நாளை மறுநாள் (திங்கள்) மற்றும் 11ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் நடக்கிறது. விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைத்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீசார் இதர அரசு துறையினருடன் இணைந்து இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தலின்படி விநாயகர் சிலைகள் அதிக பட்சம் 10 உயரம் மட்டுமே இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. சிலை பிரதிஷ்டை செய்யபட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் சிலை பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும். சிலை ஊர்வலத்தின் போது மேளம், டிரம்ஸ் வாசிப்பவர்கள் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது. விநாயகர் சிலைகள் அனைத்தும் போலீசார் அனுமதியுள்ள வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் தடை செய்யப்பட்ட வழிகளில் சிலைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை.கோவையில் 4துணை கமிஷர்கள், 12 உதவி கமிஷனர்கள், 33 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1900 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் சூலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டில் மொத்தம் 1,528 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் .புறநகர் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் முதல் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பையும் போலீசார் நடத்தினார்கள். மொத்தத்தில் கோவை மாவட்டத்தில் 2,236 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்படுகிறது. 2,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்றுஈச்சனாரி, புலியகுளம்,ரேஸ் கோர்ஸ்உட்பட விநாயகர் கோவிலில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0