அதிவேகமாக பைக் ஓட்டிய 17 இளைஞர்கள் மீது வழக்கு .

கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் பல இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிபோதையில் வாகனங்கள் ஒட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் முக்கிய பகுதியான அவினாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் அதிவேகமாக இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதாக கமிஷனருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் ரேஸ்கோர்ஸ் மற்றும் அவினாசி ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள் .அதில் அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிவேகத்தில் வாகனங்கள் ஒட்டி வந்தது உறுதி செய்யப்பட்டது .இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராத விதித்தனர்,.மொத்தம் 17 இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. அதில் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.