கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சமூக நலத்துறை சார் பில் பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு நல்ல தொடுதல், தவறான தொடுதல் (குட் டச், பேட் டச், ) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தினார்கள். அப்போது அவர்கள் பிறர் நம்மை எங்கு தொட அனுமதிக்க வேண்டும் .எந்த பகுதியில் தொட அனுமதிக்க கூடாது என்று மாணவிகளுக்கு சொல்லிக் கொடுத்தனர். யாராவது உங்களை தவறாக தொட்டு இருந்தால் தனியாக எங்களிடம் வந்து சொல்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது சில மாணவிகள் அந்த அதிகாரிகளை தனியாக சந்தித்தனர். அவர்களிடம் மாணவிகள் தயங்கி, தயங்கி, பேசினார்கள். உடனே அவர்கள் பயப்படாமல் என்ன நடந்தது? என்று கூறுங்கள் என்று கேட்டனர் .அதற்கு அந்த மாணவிகள் எங்கள் பள்ளியில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நாங்கள் பரிசோதனைக்கு சென்றோம். அப்போது எங்களை பரிசோதித்த டாக்டர் ஒருவர் உடலில் சில பகுதிகளில் தொட்டு தொல்லை கொடுத்ததாக கூறினார்கள் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த டாக்டர் யார் ?என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில் திருப்பத்தூரை சேர்ந்த டாக்டர் சரவண மூர்த்தி ( வயது 32) என்பவர் தான் பள்ளி மாணவிகளை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது .இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் டாக்டர் சரவண மூர்த்தி தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்து நடமாடும் மருத்துவ முகாமில் டாக்டராக பணியாற்றி வருவது தெரியவந்தது. அத்துடன் அவர் 10 மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த டாக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.. பின்ன டாக்டர் சரவண மூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்..இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry1
Dead0
Wink0