கோவை, பொள்ளாச்சியை சேர்ந்தவர் தனசேகர்.வியாபாரி. இவரது மகன் பூபேஸ் சக்தி சுதன் (வயது 17)பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டியில் லதாங்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவனை அதே பள்ளிக் கூடத்தில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வரும் சுரேஷ்குமார் என்பவர்கடந்த 3ஆம் தேதி மாலை 3 மணிக்கு வகுப்பறையில் செய்யுள் எழுதுமாறு கூறினாராம். அதை தவறுதலாக புரிந்து கொண்ட மாணவர் மற்றொரு செய்யுளை மாற்றி எழுதி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் சுரேஷ்குமார்வகுப்பு அறையில் வைத்துமாணவர் பூ பேசை சரமாரியாக அடித்து உதைத்தாராம். மேலும் பரீட்சை எழுதும் அட்டையால் முதுகில் தாக்கினாராம். இதில் மாணவன் பூபேஷ் சக்தி சுதன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஆசிரியர் சுரேஷ்குமார் வகுப்பறையில் உள்ள மற்ற மாணவர்களை பார்த்து அவர் அணிந்திருந்த செருப்பை கழட்டி உங்களையும் செருப்பால் அடிப்பேன் என்று மிரட்டினாராம். இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆசிரியர் சுரேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தனர். பிளஸ் 2 மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட இந்த மாணவன் பொள்ளாச்சியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி . யாக பணிபுரிந்த ஜனனி பிரியாவின் உடன் பிறந்த தம்பி ஆவார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0