பொள்ளாச்சியில் தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 மாணவனை தாக்கிய ஆசிரியர் இன்று கைது.

கோவை, பொள்ளாச்சியை சேர்ந்தவர் தனசேகர் வியாபாரி. இவரது மகன் பூபேஸ் சக்தி சுதன் (வயது 17)பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டியில் லதாங்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவனை அதே பள்ளிக் கூடத்தில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வரும் சுரேஷ்குமார் என்பவர்வகுப்பு அறையில் வைத்து அடித்து உதைத்தாராம். இதில் மாணவன் பூபேஷ் சக்தி சுதன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். மேலும் ஆசிரியர் சுரேஷ்குமார் வகுப்பறையில் உள்ள மற்ற மாணவர்களை பார்த்து செருப்பை கழட்டி உங்களுக்கும் இதே நிலை ஏற்படும் என்று மிரட்டினாராம். இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆசிரியர் சுரேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தனர். பிளஸ் 2 மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட இந்த மாணவன் பொள்ளாச்சியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி . யாக பணிபுரிந்த ஜனனி பிரியாவின் உடன் பிறந்த தம்பி ஆவார்.