கோவை, கோவில்பாளையம்அருகே உள்ள விசுவாசபுரத்தில் ஒரு வீட்டின் முன் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை கோவில்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக அவர்கள்இருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் சரவணம்பட்டி, தந்தை பெரியார் நகரை சேர்ந்த தீபக் குமார் ( வயது 18 )ஊட்டி கூடலூர், புளியம்பாறையை சேர்ந்த சிந்து ஜான் ( வயது 21 )என்பது தெரிய வந்தது. இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள்தங்கி இருக்கும் அறைக்கு சென்று கஞ்சா சப்ளை செய்து வந்ததார்களாம். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0