பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு ரூ 1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பூந்தமல்லி , ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சமூக விரோத செயல்கள் அடியோடு ஒழித்துக் கட்ட போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் பூந்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிரடி போலீஸ் படையினர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் நேரடி மேற்பார்வையில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது tn02 bt0384 பதிவு எண் கொண்ட ஐசர் லாரி மின்னல் வேகத்தில் வந்தது. அதை மடக்கி போலீசார் சோதனை போட்டனர். சோதனையில் 10 டன் எடை கொண்ட தமிழ் நாடு அரசால் தடை செய்யப்பட்ட பத்துடன் எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் ஒரு கோடியாகும் முக்கிய குற்றவாளி லாரியை ஒட்டி வந்த டிரைவர் விக்னேஷ் என்கிற வயது 27 தகப்பனார் பெயர் முருகன் ஏகே மோட்டூ  திருப்பத்தூர் அவனை கைது செய்து லாரியுடன் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார் குற்றவாளியை புழல் சிறையில் அடைத்தனர்.