கோவை,ரயில் நிலையம் வளாகத்தின் முன் புறத்தில் பழைய ரயில் பெட்டியை நவீன முறையில் ஹோட்டல் போன்று உருவாக்கி ,அதில் தனியார் நிறுவனம் ஒன்று நியாயமான விலையில் உணவு வகைகளை ரயில் பயணிகள்,பொதுமக்களுக்கு விற்பதாக கூறி போச்சே புட் எக்ஸ்பிரஸ் (ரயில் பெட்டி ரெஸ்டாரன்ட்) ஹோட்டலை கடந்த வாரம் திறந்தனர். இந்த நிலையில் ஹோட்டல் வியாபாரம் மந்தமாக இருப்பதை அறிந்த ஹோட்டல் நிறுவனத்தினர், பிரியாணி சாப்பிட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பர படுத்தினர், இதனை அறிந்து கோவை மட்டுமின்றி அருகே உள்ள கேரளமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களும் பெரும் அளவில் பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொள்ள முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர், இதனால் ரயில் நிலையை சாலை பெரிதும் போக்குவரத்து பாதிக்கபட்டது, ஹோட்டலில் உள்ள கிண்ணத்தில் பிரியாணி அடுக்கி வைத்து இருந்தனர், அதில் ஆறு பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு தருவதாக கூறினார்கள் போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள், பெண்கள் சாப்பிட தொடங்கினர், ஆனால் யாரும் இரண்டு பிரியாணிக்கு மேல் சாப்பிட முடியாமல் போனது, வியாபார யுத்தியாக விளம்பரம் செய்து மக்களை கவர, மனிதர்களின் உயிரோடு விளையாடும் இந்த பிரியாணி சாப்பிடும் போட்டி தேவைதானா என பொது மக்கள் கேள்வியாக இருந்தது, மேலும் ரயில் நிலைய சாலையில் தான் அரசு மருத்துவமனையும் உள்ளது அங்கே அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகளும், வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர், காவல்துறையும் கண்டும் காணாதது போல் கடந்து சென்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0