இரூகூர் பேரூராட்சி இயற்கையை பாதுகாத்து சுற்றுப்புற சூழல் சீர்கேடு ஏற்படுத்தாமல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது இடங்களில் குப்பைகளை கொட்டவிடாமலும், அதே சமயம் பேரூராட்சி ஊழியர்கள் பொது இடங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துகிறார்கள். திடக்கழிவு மேலாண்மை செயல்படும் இடத்தில் தினமும் தீயிட்டு கொளுத்துகிறார்கள்.இதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு காற்று மாசுபடுதல், நிலத்தடி நீர் மாசுபடுதல், பொது மக்களுக்கு சுவாச கோளறுகள் ஏற்படுத்துதல், இது போன்ற செயல்பாடுகளை தவிர்த்து நல்ல முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சார்பாகவும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நாமும் நமது பேரூராட்சியை அனைத்து பேரூராட்சிக்கும் முன்னுதாரணமாக செயல்படுத்தலாம் என்று இருகூர் வாசிகள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நெடுநாட்களாக பேரூராட்சி நிர்வாக்கத்திடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இதற்கு செவிசாய்த்து நடவடிக்கை எடுக்குமா இருகூர் பேரூராட்சி நிர்வாகம்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0