திருச்சியில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல சங்கம் மறியல் போராட்டம்.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது திருச்சி டி என் எஸ் டி சி மண்டல அலுவலகம் முன்புமண்டல தலைவர் சேகர் தலைமையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்திற்கு மாநில மைய நிர்வாகி சின்னசாமி மாநில துணைத்தலைவர் சண்முகம் மாநில துணைத்தலைவர் புதுக்கோட்டை இளங்கோவன் மாநில துணைச் செயலாளர் காரைக்குடி சிவகுமார் மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த மறியல் போராட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பொது துறையை பாதுகாக்க போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்க கூடாது பணியாளர் நியமனத்தில் ஒப்பந்த முறை கைவிட வேண்டும் ஓய்வு பெற்று இருபது மாதங்களாகியும் வழங்கப்படாமல் உள்ள ஓய்வு கால பண பலன்களை உடனே வழங்குவது உட்பட ஏராளமான கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது முன்னதாக அனைவரையும் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த போலீசார் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர் மாலையில் விடுவித்தனர் இந்த மறியல் போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை பரபரப்பாக இருந்தது.