திருச்சியில் தமிழ்நாடு ஏ ஐ டி யூ சி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏ ஐ டி யூ சி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நல வாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தை மாநிலத் துணைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் துவக்கி வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் நிறைவுறையாற்றினார் இதில் பழனியப்பன் மருதம்பாள் முத்துலட்சுமி இருதயசாமி வீராசாமி பாலசுப்பிரமணி துரைராஜ் சுமதி உட்பட ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்றனர் இதில் தமிழக அரசை வாரிய முடிவுகளை வாரியம் நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும் எனவும் வாரியம் முடிவுப்படி ஓய்வூதியம் மாதம் 2000 உடனே வழங்க வேண்டும் உட்பட ஏராளமான கோரிக்கைகள் அரசின்கவனத்திற்கு வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் சந்திரா ரஷ்யா பேகம், வித்யா பூபதி பழனியம்மாள் செந்தாமரை கதிர் வடிவில் மீனாட்சி பல்கீஸ் பானு சவுந்தர்யா தனலட்சுமி சங்கரதாஸ் முத்துலட்சுமி மகாலட்சுமி விஜயலட்சுமி பிரபா ஹேமலதா விசாலாட்சி ஜெகதீஸ்வரன் குமரேசன் நசீமா சுப்பிரமணி நாகராஜ் உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்டத் துணைத் தலைவர் முத்தழகு நன்றி கூறினார்.