தமிழக தர்காக்கள் பேரவை கூட்டம் திருச்சி வரகனேரி கறிக்கடை வியாபாரிகள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளரும், திருச்சி நத்தர் வலி தர்கா நிர்வாக தலைமை அறங்காவலருமான அல்லாபக்ஸ் என்கின்ற முகமது கவுஸ்அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார் திருச்சி மாவட்ட தலைவர் எம் ஐ இ டி ஷாகுல் ஹமீது கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடிவில் நன்றி கூறினார்.கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன அதில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டதுஇந்த சட்ட திருத்தத்தை தொடக்கத்திலிருந்து காங்கிரஸ் திமுக கம்யூனிஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விடுதலை சிறுத்தை கட்சி உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளும் திரு ணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அதனை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்தன பீகார் முதல்வர் நித்திஷ் குமார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் தங்கள் கட்சியின் எதிர்ப்பில் உறுதியான நிலைப்பாட்டை முஸ்லிம் நபர் சட்ட வாரியத்திடம் தெரிவித்தனர் மேலும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தர்காக்கள் பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துதீர்மானம் நிறைவேற்றப்பட்டது இரண்டாவது தீர்மானத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பதவி விலகலை ஏற்க வேண்டாம் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறவேற்றப் பட்டது. மேலும் வக்பு நலனுக்காக துணிந்து நடவடிக்கை மேற்கொண்டு தனது பங்கை சிறப்பாக ஆற்றினார் எனவே வக்பு சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைந்து வருவோர் தங்களின் ஆதாயம் பாதிக்கப்படுவதால் எதிர்ப்பு தெரிவித்து விரல் விட்டு எண்ண கூடிய சில சமூக வலைதளம் மூலம் அவதூறு பரப்புவதால் அப்துல் ரஹ்மான் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார் இதனை தமிழக அரசு அவருடைய பதவி விலகலை ஏற்க வேண்டாம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவதாக மானுட சமுதாய த்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அவதரித்த அண்ணல் நபி முஹம்மது அவர்களின் பிறந்தநாள் விழாவை ஒட்டி ஒவ்வொரு மஹல்லாவிலும் சுன்னத் வல் ஜமாத் கொள்கை யில் உறுதி கொண்டவர்கள் தமிழக தர்காக்கள் பேரவை நடத்தும்மீலாது விழாவை சிறப்பாக நடத்திட இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறத. இவ்வாறாக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0