கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பிற வெளி நாடுகளில் இருந்து பயணிகள் விமான சேவை நாள் தோறும் நடக்கிறது. இதில் நேற்று அதிகாலை சார்ஜா வில் இருந்து ஏர் அரேபியா விமானம் நாற்பதுக்கும் மேற்பட்ட விமான பயணிகளுடன் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மையமாக கொண்டு மத்திய அரசின் சுங்க துறை அலுவலகம் செயல் படுகிறது, இங்கே உள்ள சுங்க துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் ஒன்று கிடைக்கிறது, அதில் கோவை விமான நிலையத்திற்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில்
சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைக்க அதன் அடிப்படையில்
கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்த ஏர் அரேபியா விமானத்தில், வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வருகையில் இருந்து சோதனை மேற்க்கொண்டனர் அப்போது ஏர் அரேபியா விமானத்தில் ஒரு கோடி மதிப்புடைய தங்க கட்டிகள் கேட்பாரற்று லக்கேஜ் வைக்கும் இடத்தில் பாலித்தீன் கவரில் சுற்றப்பட்டு இருந்த 12 தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை கைப்பற்றியை தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விமானத்தின் உள் பக்க பேனலில் லெக்சைடில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 24 காரட் தூய்மையான 1399 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்கள் அடங்கிய மூன்று பாக்கெட்டுகளில் தங்ககட்டிகள் ரூ. 1.02 கோடி ரூபாய் தோராயமாக இருக்கும் என தெரிவித்தனர் விமானத்தில் கைப்பற்றிய தங்க கட்டிகளை உரிமை கோரி இது வரை யாரும் வர வில்லை என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர், தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த பயணிகளை அடையாளம் கண்டு பொருட்களுடன் கொண்டு லக்கேஜ்களை சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து ஆராய்ந்து வருகின்றனர் விரைவில் தங்கம் கடத்தி வந்தவர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க படும் என சுங்கத்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கோவை விமான நிலையம் சற்று பரப்பரபான நிலை காணப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0