டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் போதை மருந்துகள் – ஊசி விற்பனை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சூளேஷ்வரன் பட்டி விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் என்ற ஊசி பாஸ்கரன் என்ற சுதாகரன் (வயது 42)இவர் டாக்டர்கள் பரிந்துரையின்றி போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் ஊசிகளை விற்பனைசெய்து வந்தாராம். இவரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக பாஸ்கர் என்றசுதாகரன்(45) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். டாக்டர்.கார்த்திகேயன்,பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் மேற்படி வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான பாஸ்கரன் என்ற சுதாகரனை(45)குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.