திருச்சி கே கே நகர் உதவி கமிஷனராக இருந்த பழனியப்பன் திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகவும் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக இருந்த கல்யாண குமார் கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ஆகவும் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசுயா சிபிசிஐடி கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஆகவும் நாகப்பட்டினம் மாவட்டம் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி ஆக இருந்த அப்துல் ரகுமான் புதுக்கோட்டை டிஎஸ்பி ஆகவும் திருச்சி என்ஐபி சிஐடி டிஎஸ்பியாக இருந்த தினேஷ்குமார் லால்குடி டிஎஸ்பியாகவும், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தஞ்சை மாவட்டம் வல்லம் டிஎஸ்பியாகவும், நாகப்பட்டினம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மதுரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் டிஎஸ்பியாக இருந்த திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையம் டிஎஸ்பியாகவும் திருச்சி பயிற்சி மையம் டிஎஸ்பியாக இருந்த மயில்சாமி மயிலாடுதுறை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நில அபகரிப்புப் பிரிவு டிஎஸ்பி கந்தசாமி விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாகவும் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி அருணாசலம் கன்னியாகுமரி மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் டிஎஸ்பியாகவும் பெரம்பலூர் டிஎஸ்பியாக இருந்த பழனிசாமி சேலம் ரேஞ்ச் பயிற்சி மைய டிஎஸ்பியாகவும் திருநெல்வேலி நகர மேலப்பாளையம் உதவி கமிஷனராக இருந்த காமராஜ் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் புதுக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த ராகவி சென்னை என்ஐபி சிஐடி டிஎஸ்பியாகவும் திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த சுந்தரபாண்டியன் மயிலாடுதுறை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ் பியாக இருந்த கார்த்திகேயன் விழுப்புரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் செங்கல்பட்டு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த அருள்மொழி அரசு தஞ்சை டிஎஸ்பியாகவும் கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த அண்ணாதுரை நாகப்பட்டினம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாக இருந்த எம்.எஸ்.எம். வளவன் சென்னை பெருநகர காவலர் நலன் மற்றும் சமூக காவல் பிரிவு உதவி கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 20 டிஎஸ்பிக்கள் மாற்றம் காவல்துறையினர் இடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0