கோவை, நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி லீலா (வயது 72) இவர் கடந்த 21-ம்தேதி கோவை விளாங்குறிச்சி உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று ஊருக்கு திரும்பு வதற்காக பீளமேடு ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து காந்திபுரத்துக்கு அரசு டவுன் பஸ்சில்பயணம் செய்தார். காந்திபுரம் பஸ் நிலையம் சென்றதும் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடி விட்டனர். இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink0