உலக புகைப்பட தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோபி பசுமை போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பில் மரத்தான் போட்டி கோபிசெட்டிபாளையம் முருகன் புதூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மராத்தான் போட்டியில் 12 முதல் 18 வயதுடைய சிறுமிகளுக்கு மூன்று கிலோமீட்டர் தூரமும், 12 முதல் 18 வரை வயதுடைய சிறுவர்களுக்கு ஆறு கிலோமீட்டர் தூரமும், 18 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஆறு கிலோமீட்டர் தூரமும், 18 முதல் 30 வயதுடைய ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது..மேலும் இந்த மராத்தான் போட்டி கோபிசெட்டிபாளையம் முருகன் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கி பாரியூர் பிரிவு, கோபி பேருந்து நிலையம், கச்சேரி மேடு, நல்ல கவுண்டம்பாளையம், கரட்டடிபாளையம், வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் அதே வழியாக கல்லூரி வளாகத்தை அடைந்தது. சிறுவர் சிறுமிகள் ஆண்கள் பெண்கள் என நான்கு பிரிவின் கீழ் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0