திருச்சி மேயரை பதவி விலக கோரி பாஜகவினர் சங்கு ஊதி போராட்டம்.

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் விநியோகிக் கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மஞ்சள் காமாலை, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு திருச்சி மாநகர மக்கள் ஆளாகி வருகின்றனர். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் மலைக்கோட்டை முதல் சின்ன கடை வீதி வரையில் உள்ள வார்டுகளில் தொடர்ச்சியாக கலங்கலான தண்ணீர் வழங்கப்பட்டு வந்ததால் அதனை குடித்த 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல் சுத்தமான குடிநீர் வழங்க கூட முடியாத திமுக அரசையும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சங்கினை பறித்து பாஜகவினரை அப்புறப்படுத்தி கைது செய்ய முற்பட்டதால், ஆத்திரமடைந்த பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அப்போது போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மக்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்களுடன் சேர்ந்து போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். சமீப காலமாக திருச்சி மாநகர மேயர் செயல்பாடு சரி இல்லை என்று பொதுமக்களும் ஏன் அவருடைய கட்சிக்காரர்கள் சில மாமன்ற உறுப்பினர்கள் கூட குறை கூறினார்கள் கைது செய்த பாஜகவினரை அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.