காட்பாடி, ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் நாயுடு பேட்டை 3 வது தெருவில் ராஜகோபாலபுரம் பகுதி உள்ளது.இங்கு புருஷோத்தம் மனைவி தனலட்சுமி வயது 47.இவர் பெங்களூர் செல்வதற்காக பொம்ம சமுத்திரம் ரயில் நிலையத்திற்கும் காட்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையே திருப்பதி சாம்ராஜ்நகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரவு 7 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது மர்ம கொள்ளையன் பயணி தனலட்சுமி கழுத்தில் இருந்த 2 சவரன் தாலி தங்கச்சங்கிலியைமதிப்பு ரூபாய் 1 லட்சமாகும். லபக்கென்று பறித்துக் கொண்டு ஓடி விட்டானா ம். தனலட்சுமி யோ அய்யா சாமி எம் புருஷன் புருஷோத்தம் ஆசை ஆசையாக கட்டின தாலி தங்க சங்கிலியை எவனோ பறித்துவிட்டு ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்து ஜெயிலில் போடுங்க. தாலி தங்கச்சங்கிலியை மீட்டுக் கொடுங்க என காட்பாடி ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி இடம் அழுது கொண்டே புகார் கொடுத்தார். சேலம் ரயில்வே டிஎஸ்பி பெரியசாமி தலைமைக் காவலர் பரிமளா ஆகியோரது நேரடி விசாரணையில் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0