பூந்தமல்லியில் 51 கிலோ குட்கா பறிமுதல் குற்றவாளி கைது

பூந்தமல்லி லட்சுமிபுரம் பிரதான சாலை புது தெருவில் பாண்டுரங்கனின் மகன் சேகர் வயது 58. இவன் தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அதிக போதை ஏற்றும் குட்கா பொருட்களை வீட்டில் பதுக் வைத்து விற்பனை செய்வதாக பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஜார்ஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வீட்டை சோதனை இடுகையில் 51 கிலோ குட்கா இருந்ததை கண்டுபிடித்தார். அப்போது ஒரு பெண் இந்த வீட்டில் தான் குட்கா இருப்பதாக சொன்னார்கள். இதை மென்று சாப்பிட்டால் வானத்தில் பறக்கும் உற்சாகம் கிடைக்கும் என சொல்லினாள். உடம் பெல்லாம் வலிக்குது. இதை சாப்பிட்டால் தான் வலி போகும். நீங்க போய் அதை ஏன் பறிமுதல் செய்றீங்க என அப்பாவித்தனமாக போலீசாரிடமே கேள்வி கேட்டாள். போலீசார் இது குறித்து சேகரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.