திருமுல்லைவாயல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆர். பாலுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் படையினரோடு அயப்பாக்கம் பகுதியில் உள்ள காவேரி தெரு அபர்ணா நகர் பகுதியில் உள்ள செந்தில்குமார் வயது 31.பன்னீர்செல்வம் என்பவன் தனது வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அயப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக சப்ளை செய்வதாக வீட்டை சோதனை போட்டனர். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கூல் லிப் விமல் பான் மசாலா போதைப் பொருட் களை 137 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர். குற்றவாளி செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி செந்தில்குமாருக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்த ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் வயது 40. தகப்பனார் பெயர் நாராயணன். நாகலாபுரம் ஊத்துக்கோட்டை இவனையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0