ஆவடி; சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வத் வயது 32.தகப்பனார் பெயர் ராமகிருஷ்ணன் என்பவர் இன்ஸ்டாகிராமில் கொள்ளை லாபம் தரும் ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து மோசடிக்காரர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸாப் சாட் களை நம்பி பல தவணைகளில் மோசடிக் காரர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில் சுமார் 29 கோடியே 6 லட்சம் வரை டெபாசிட் செய்ததாகவும் பின்னர் தன்னால் தான் செலுத்திய பணம் மற்றும் மோசடி நபர்கள் காட்டிய கணக்குகளில் லாபம் என கூறிய தொகையையும் எடுக்க முடியாமல் போகவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு ஆய்வாளர் பி. பிரவீன் குமார் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மோசடி செயலில் ஈடுபட்ட நபரின் வங்கி கணக்குகள் மூலம் குற்றவாளி குரோம்பேட்டையில் இருப்பதாக தெரியவந்து அங்கு விரைந்து சென்று விசாரணை செய்து சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் திருமலை நகர் ரேகா அவென்யூ பகுதியைச் சேர்ந்த குத்புதீன் வயது 58. தகப்பனார் பெயர் மொய்தின் பாபு என்பவனை கைது செய்து பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த குற்றச்செயலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோசடி நபர்கள் ஈடுபட்டிருப்பதும் அதன் மூலம் பல கோடி ரூபாய் சுருட்டி உள்ளதும் தெரிய வந்துள்ளது. தலை மறைவு குற்றவாளிகளை தீ வி ரமாக தேடி வருகின்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0