கோவை மாநகர போலீசாருக்கு பேட்டரியில் இயங்கும் 3 சக்கர ரோந்து வாகனம் அறிமுகம்

கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் “டிரைக் ” என்ற பெயரில் பேட்டரியால் இயங்கக்கூடிய 3சக்கர ரோந்து வாகனம்தயாரித்துள்ளனர்.இந்த வாகனம் பேட்டரியால் இயங்கக்கூடியது.இதில் ஒலிபெருக்கி மற்றும் வயர்லெஸ் கருவி பொருத்தப்பப்பட்டுள்ளது.இந்த புதிய கண்டுபிடிப்பை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார் ஆணையர் அலுவலகவளாகத்தில் 3 சக்கர ரோந்து வாகனத்தைஓட்டிப் பார்த்தார்.போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார், சுஹாசினிஆகியோரும் இந்த வாகனத்தை ஓட்டிப் பார்த்தனர்.இந்த வாகனம் மாநகர போலீஸ் ரோந்து பணிக்கு வழங்கப்படுகிறது.இதை போலீஸ் கமிஷனர்
பாலகிருஷ்ணன் இன்று மாலை ரேஸ்கோர்ஸ்சில் வைத்து தொடங்கி வைக்கிறார்.