கோவை: அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளானஎம். டி, எம். எஸ் .முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர் களை கொண்டு நிரப்பப்படுகிறது. 20 24- 25 ஆம் கல்வி ஆண்டு முதல் நிலை மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. கோவை சரவணம்பட்டி, துடியலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்பட 12 மையங்களில் காலை ,மாலை என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 4,810 பேர் எழுதினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0