தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.கோவை ஆகஸ்ட் 8 முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று மதியம் 11 மணிக்கு தனி விமான மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது பின்னர் அங்கிருந்து காரில் கோவை ரேஸ் கோர்சில் உள்ள அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்கு சென்றார். வழிநெடு கில்அவிநாசி ரோட்டில் ரோட்டில் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று முதலமை ச்சருக்கு வரவேற்பு அளித்தனர். 11 -15மணிக்குதமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.மாணவர்கள அற்புதராஜ், பார்த்திபன்,காதர் மைதீன்,யாசர்,கோபிநாத், தமிழரசு,ஜெயசூர்யாசரவணன்,உட்பட மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டது.அரசு கலைக் கல்லூரிமாணவர்கள் சரவணகுமார்,ஜார்ஜ் பெர்னாண்டஸ்,தங்க ராஜேஷ் குமார், ஆகியோர்முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.,இதன்மூலம் 3லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள்மாதம்தோறும் ரூ. 1000 பெறுகிறார்கள். தமிழ் புதல்வன் பற்றிய குறும்படத்தை பார்த்தார். பிறகு செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மைய திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ. 40 கோடியில் கட்டப்பட்ட உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைக்கான புதிய கட்டிடம் ,வ. உ .சி. மைதானம் அருகே ரூ | கோடியில்கட்டப்பட்ட உணவு வீதி,புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஆகியவற்றை காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்துபேசினார்.அப்போது அவர் கூறியதாவது:தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு நேற்று இரவு வங்கியின் மூலம் 1000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.கோவையில் உள்ள இந்த அரசு கலைக் கல்லூரிக்கு மாணவர்களுக்கு விடுதியும், கருத்தரங்கு கட்டிடமும் இல்லை என்ற கோரிக்கையைஇந்தகல்லூரி முதல்வர் என்னிடம் வைத்தார். அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும். இந்த அரசு கலைகல்லூரியில் மாணவர்களுக்கு தங்கும் விடுதியும் கல்லூரியில் கருத்தரங்கு கட்டிடமும் விரைவில் கட்டப்படும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ . வேலு,முத்துசாமி,கீதா ஜீவன். அன்பில்மகேஷ் பொய்யாமொழி கணபதி ராஜ்குமார், எம்பி,சட்டமன்ற உறுப்பினர்வானதி சீனிவாசன்,கோவை மாநகராட்சிமேயர் ரங்கநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து காரில் உக்கடம் புறப்பட்டு சென்றார். உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ரூ. 481 கோடியில் அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கணியூர் சென்றார் அங்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவவெண்கலச் சிலையை திறந்து வைத்தார். அந்த கட்டிடம் முன் 116 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். விழா முடிந்ததும் மதியம் 12- 45 மணிக்கு புறப்பட்டு கார் மூலம் கோவை விமான நிலையம் சென்றடைந்தார். 1 – 15 மணிக்கு அங்கிருந்து சென்னை புறப்பட்டார். ச முதலமைச்சர் வருகையை யொட்டி தமிழ்நாடு சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மேற்பார்வையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது .4 துணை கமிஷனர்கள் . 19 உதவி கமிஷனர்கள், 45 இன்ஸ்பெக்டர்கள், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முதலமைச்சர் வருகைக்காக கோவையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது..கோவை மாநகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் ,ஓட்டல்கள் ஆகியவற்றில் நேற்று இரவு சிறப்புசோதனை நடத்தப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0