போலி பொது அதிகாரம் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ 51 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை அபகரித்த 2 கேடிகள் கைது

ஆவடி: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல கோடி ரூபாய் கொடுத்து மனைகளை வாங்குவது போதாது.இருக்கவே இருக்கிறது ஒரு கொள்ளை கும்பல் உஷார் உஷார். மனைகளை பத்திரப்படுத்தி நான்கு பக்கமும் இரும்பு முள் கம்பிகளை பாதுகாப்பாக அமைப்பதோ இல்லையென்றால் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு காவலாளி நியமிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அதோ கதி தான். ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் ஏ. ஆர். பாலசுப்பிரமணியம் ஓய்வு பெற்ற டி ஆர் டி ஏ விஞ்ஞானியாக பணியாற்றி ஆவடி கவரப்பாளையம் பஜனை கோவில் தெரு பகுதியில் மேற்கண்ட முகவரியில் பரம்பரை பரம்பரையாக நிம்மதியாக வசித்து வந்தேன்.அந்த நிம்மதி இப்போது பறிபோய்விட்டது என புகார் மனுகொடுத்துள்ளார். மத்திய குற்றப்பிரிவில் அவர் கொடுத்துள்ள புகாரில் ஆவடி தண்டுரை மாடர்ன் சிட்டி போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன பணியாளர்களின் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் மூலமாக ஆவடி துணைப்பதிவாளர் அலுவலகத்தில் 2000ம் ஆண்டு 2340 சதுர அடி காலி மனை கிரையம் பெற்று அனுபவத்தில் வைத்திருந்தார். பாலசுப்பிரமணியம் அந்த இடத்தில் அழகிய வீடு கட்டலாம் என வில்லங்கச் சான்று போட்டு பார்த்ததில் 2023ம் ஆண்டு பரசுராமன் என்பவனுக்கு நான் பொது அதிகாரம் கொடுத்ததாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு ஆகி உள்ளது. பொது அதிகாரத்தில் சாட்சிகளாக சரவணன் கையெழுத்து போட்டு உள்ளான்.2.4.2024ம் தேதி பரசுராமன் அவனது மனைவி சகுந்தலா என்பவளுக்கு கிரயம் செய்துள்ளது தெரிய வந்தது. பாலசுப்பிரமணியத்தை ஏமாற்றி போலியாக பத்திரம் பதிவு செய்து மதிப்பு ரூபாய்51 லட்சம் உடையது. அந்த கேடிகளை ஈவு இரக்கமின்றி கைது செய்ய வேண்டும் என கொடுத்த புகாரின் மீது நில பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரட்டு நாயகி வள்ளி அதிரடி விசாரணைநடத்தி வந்தார். ஓடி ஒளிந்து கொண்டு இருந்த குற்றவாளிகள்1.சரவணன் வயது 53. தகப்பனார் பெயர் கண்ணப்பன் அம்பேத்கர் குறுக்கு தெரு செந்தமிழ் நகர் பட்டாபிராம் சென்னை. 2. பால்ராஜ் வயது 29. தகப்பனார் பெயர் சேவியர். சீனிவாச தெ ரு. ராஜீவ் காந்தி நகர் ஆவடி சென்னை. இரண்டு கேடிகளையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு திறமையாக செயல்பட்ட மத்திய குற்றப்பிரிவு நிலப் பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்ட மற்றும் போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.