ஆடித் திங்களில் வரும் பூர நாளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிது இந்நன்னாளில் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் விழாவை சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது அந்த வகையில். அந்த வகையில் அகிலாண்ட கோடி அன்னை சூலூர் தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரனுக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடைபெற்று வளை காப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செ.ம .வேலுச்சாமி குடும்பத்தார், இன்ஜினியர் தூர்தர்சன் குடும்பத்தார், அகத்தியர் சக்திவேல் குடும்பத்தார் மற்றும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மையப்பனை அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர வைத்து 1008 அம்பாள் சொல்லப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது தொடர்ந்து வருகை தந்த பக்தர்களுக்கு வளைகாப்பு உணவு வழங்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0