நீலகிரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி ஆணைப்படி கழகப் பொதுச் செயலாளர். புஸ்ஸி என். ஆனந்த் அறிவுறுத்தலின்படி வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்கு நிவாரண பொருட்கள் வழங்க உதகை நகர தலைமை சார்பாக முடிவு செய்யப்பட்டது, அதனைதொடர்ந்து கழக நிர்வாகிகள் வார்டு கிளை ஆகிய அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது, அதனை ஏற்று அரிசி(510kg), மளிகை பொருட்கள் , ரொட்டிகள் கோதுமை மாவு, ஆடைகள் மற்றும் நாப்கின்ஸ், காலணிகள்,ஸ்வட்டர் ,ஷால், ஜெர்கின் கம்பளிகள் உல்லன் ஸ்கார்ப், பனியன், குழந்தைகள் :- பேஸ்ட், டூத் பிரஸ்,சோப்பு, கப்பு, பிஸ்கட் , துணிகள் வேட்டி, போன்ற 1.47 லட்சம் மதிப்புடைய நிவாரண பொருட்களை கழக நிர்வாகிகள் வார்டு கிளை ஆகிய அனைவரும் உதகை நகர அலுவலகத்தில் உதகை நகர தலைவர் ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர். அதனை வயநாட்டில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்று உதகை நகர தலைமை சார்பாக உதகை நகர தலைவர் ஜெயக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஸ்டான்லி, முசிர் ,குணா ,மல்லிகாந்த், ஆறுமுகம் ,ஷஃபி மற்றும் பல்வேறு நகர நிர்வாகிகள், வார்டு கிளை நிர்வாகிகள்
சேர்ந்து ஒப்படைத்தனர். நிவாரண பொருட்கள் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் உதகை நகர தலைமை சார்பாக நன்றியினை தெரிவித்துள்ளனர்,.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0