கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக் கிணறு ஹவுசிங் யூனிட் பேஸ் 1 பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் ( வயது 36) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆடிப்பண்டிகைக்கு சென்று விட்டார். இரவில் வந்து பார்த்தபோதுவீட்டின் முன் கதவ பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 கிராம் தங்க காசு 2 வெள்ளி விளக்கு, ஒரு செம்பு விளக்கு,பணம் ரூ.1, 700 ஆகியவற்றை காணவில்லை. யாரோதிருடி சென்று விட்டனர். இதுகுறித்து பிரசாந்த் துடியலூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0