நீலகிரி மாவட்ட உதகை காந்தல் பகுதியை முக்கோணம் பேருந்து நிற்கும் இடம், மற்றும் முக்கிய சாலையான குருசடி காலனி பிங்கர் போஸ்ட் செல்லும் ஜங்ஷன் என்னும் இடத்தில் பாதாள சாக்கடை உடைபட்டு மனித கழிவு நீர் பல நாட்களாகவே வெளியேறிக் கொண்டிருக்கிறது இப்பகுதியில் நகராட்சி பணிகளும் முக்கிய பிரமுகர்களும் செல்லக்கூடிய ஒரு வழியாகவும், இந்தக் கழிவு நீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவு நீர் பொதுமக்கள் பேருந்து ஏறுவதற்கும் இறங்கும் இடத்தில் தேங்கி நிற்கின்றன, சுகாதார சீர்கேடு விளைவதை அப்பகுதி நகர மன்ற உறுப்பினருக்கு தெரியுமா என்பது மக்களின் கோபம் எழுந்துள்ளது, மற்றும் கழிவுநீர் தேங்குவதை நகராட்சியும் கண்டுகொள்வதில்லை என பேருந்துக்கு நிற்கும் மக்கள் தெரிவிக்கின்றனர், இந்தக் கழிவு நீர் தேங்குவது மட்டுமில்லாமல், அங்கு கோவில் பேருந்து நிற்கும் இடம் அருகே பார்சன்ஸ் வேல்யூ பைப் லைன் ஜங்ஷன் உள்ளது இதில் ஏற்கனவே குடிநீர் விநியோக பைப் தற்போது லீக் ஆகி உள்ளது இதனோடு கழிவு நீரும் கலந்து செல்வதால் குடிநீர் விநியோகம் செய்யும் பல பகுதிக்கு இந்த கழிவுநீரும் கலந்து போகும் அபாயம் ஏற்படுகிறது, இதனை உற்று நோக்கி கவனித்தால் மட்டும் தெரியும்? கழிவு நீரும் குடிநீரும் கலந்து சென்றால் சுகாதார சீர்கேட்டை மக்களுக்கு நேரடியாக அனுப்பும் அவல நிலை ஏற்படுவது உறுதி என்ற பகுதி மக்கள் கோபத்துடன் தெரிவிக்கின்றனர், கழிவுநீர்கள் வெளியேறுவதால் குடிநீர் விநியோக பைப்புகள் பயன்படும் இடங்களுக்கு செல்வதால் குடிநீரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது இதனை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், இந்த கழிவு நீர் சாலையில் செல்வதாலும் நடந்து செல்லும் மக்கள் மீது தெளிக்கப்பட்டு உடைகளும் நாற்றம் அடிக்கிறது, மற்றும் போக்குவரத்து இடையூறுகள் அப்பகுதியில் அவ்வப்போது ஏற்படுகிறது என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர், இதனை உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சி மற்றும் நகர மன்ற உறுப்பினர் கவனம் செலுத்துவார்களா எனத் தெரியவில்லை அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்??
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0