வீடு புகுந்து தங்க நகைகள் திருடிய 4 பேர் கைது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர்பிரின்சஸ் (49) இவர் கடந்த மாதம் 12 – ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மகனை பார்த்து விட்டு திரும்பி வந்தார். அப்போது, அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுதிறந்து கிடந்தது. வீட்டில் பீரோவிலிருந்த 8½ சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்து, மேற்படி சம்பவம் தொடர்பாக பிரின்சஸ் சூலூர் காவல் நிலையத்தில்புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன், உத்தரவிட்டார். இதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணைநடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தனிப்படையினர் கோவை ரஜினிகாந்த் மகன் ரோகன்(24) பெரியசாமி மகன் விஜய் (26) மனோகர் மகன் அபிலேஷ் (29) மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் முபாரக் அலி (29) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் பேரில், 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.,மேலும் மேற்படி நபர்கள் சூலூர், கருமத்தம்பட்டி,பெரியநாயக்கன்பாளையம், மற்றும் பல்லடம் பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது..இந்நிலையில் அவர்களிடமிருந்து மேற்படி வழக்குகளின் செத்துக்களான 17½ சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொள்ளை கும்பலை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.