கோவை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி தூக்கு போட்டு தற்கொலை

கோவை: கரூர் மாவட்டம் மண்மங்கலம் பக்கம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற தாதா சிவா என்ற சிவக்குமார் (வயது 48)இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2020 ஆண்டு முதல்கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப் பட்டுள்ளார். நேற்று மாலையில்இவர்சிறையில் மூன்றாவது பிளாக்கில் உள்ள ஜன்னலில் துண்டை கட்டி தூக்கில் தொங்கினார். இதை பார்த்த சிறைக்காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்தார்.இவர்சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாராம். இதற்காக மருந்து .மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ஜெய்லர் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..பாதுகாப்பு நிறைந்த கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.