ஆடிப்பெருக்கு விழா. மருதமலை மலைப்பாதையில் நாளை கார்கள் செல்ல தடை

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.இது பக்தர்களின் 7- வது படை வீடாக கருதப்படுகிறது..நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஆடிப்பெருக்கு திருவிழா நாளை ( சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது .இந்த நாட்களில் மலைப்பாதையில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 சக்கர வாகனங்களிலும்,,ம லைபடிகள் வழியாகவும், கோவில்தேவஸ்தான பஸ்களிலும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் .பக்தர்களின் கூட்டம் நெரிசலை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் செயல் அலுவலர் , மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகிறார்கள்.இதே போல கோவை காந்தி பார்க், சுக்கிர வார்பேட்டை பகுதியிலுள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம் தலைமையில்நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.