ஆவடி : சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த ரவீந்தர் பரீக் வயது 53. தகப்பனார் பெயர் பரீ க். தனியார் நிறுவனத்தில் அம்பத்தூர் எஸ் டே டீ ல் வேலை செய்து வருகிறார். இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் பார்த்து இன்ஸ்டாகிராமில் கொள்ளை லாபம் தரும் ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து மோசடிக்காரர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சாட்களை உண்மை என்று நம் பி பல தவணைகளில் கேடிகள் கொடுத்த வங்கி கணக்குகளில் ரூ 57 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்ததாகவும் தன்னால் தான் செலுத்திய பணம் மற்றும் மோசடி நபர்கள் காட்டிய கணக்குகளில் லாபம் எனக் கூறிய தொகையும் எடுக்க முடியாமல் போகவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸ் கமிஷனர் இடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மோசடி செயலில் ஈடுபட்ட நபரின் வங்கி கணக்குகளை கொடுத்து மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட பிராடுகள் பெரம்பூரைச் சேர்ந்த பரிதா மற்றும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரை விசாரணை செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கைது செய்து பூந்தமல்லி குற்றவியல் முதலாம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கேடிகள் இணைய வழி குற்ற செயல்கள் மூலமாக பண மோசடி செயலுக்கு உடனடியாக இருந்துஅக் கும்பலுக்கு ஏஜென்ட் ஆக செயல்பட்டதும் இச்செயல் மூலமாக நாட்டின் பல மாநிலத்தைச் சேர்ந்த பல நபர் ர்களை ஏமாற்ற உடந்தையாக இருந்ததும் அதன் மூலமாக பல கோடி ரூபாயை மோசடிக்காரர்கள் சுருட்டியுள்ளதும் தெரிய வந்தது. தலை மறைவு குற்றவாளிகளை இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்கில் வரும் செய்திகளை பார்த்து தேவையில்லாத லிங்க் மூலம் பணத்தை இழக்க வேண்டாம் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பொதுமக்களை எச்சரிக்கை படுத்தியுள்ளார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0