கோவையில் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி தலைமையில் குறை தீர்ப்பு முகாம்-வீடியோ இணைப்பு.!!

கோவை: பழைய கார் உதிரிபாகங்கள் விற்கும் சங்கத்தினருக்கு காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கோவை குனியமுத்தூர் பகுதியில் குறை தீர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழைய உதிரி பாகங்கள் விற்கப்படும் இடத்தில் முறையாக உரிமம் பெறுவது குறித்தும் முறையாக செயல்படுவது குறித்தும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி மூலமாக அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் அவர்கள் குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்த முகாமில் கோவை காவல் துணை ஆணையர் டாக்டர் சரவணகுமார் , காவல் உதவி ஆணையர் குனியமுத்தூர் சரகம் டாக்டர் அஜய் தங்கம் , கரும்புகடை D6 காவல் நிலைய ஆய்வாளர் தங்கம் , கரும்புகடை D6 காவல் உதவி ஆய்வாளர்  M S முருகன், கோவை உதவி தீயணைப்பு அதிகாரி அழகர் சாமி ,மாநகராட்சி ஆய்வாளர் தனபால் , 86 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஹமத் கபீர் , 87வது வார்டு மாமன்ற உறுப்பினர் உதயநிதி பாபு மற்றும் கோவை பழைய கார் உதிரிபாகங்கள் சங்க தலைவர்  ஜாகிர் உசைன் , செயலாளர் அன்சர் (hilux) , பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்..