கேரளாவுக்கு தமிழக அரசு ரு 5 கோடி நிதி உதவி.

கோவை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட பகுதி மக்களுக்கு உதவி செய்வதற்கு தமிழ்நாடு அரசு ரு 5 கோடி நிதி உதவி வழங்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித் துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தீயணைப்ப படையினர், மருத்துவர்கள் அடங்கிய குழு கேரளாசெல்கிறது 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் இந்த குழுக்கள் செயல் படுகிறது.கேரள சேத விவரங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேரளா முதலமைச்சரிடம் தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வயநாடு செல்கிறார்.