திருச்சி ஸ்ரீரங்கம் பள்ளியில் மாணவர் ஆசிரியருக்கு கத்திக்குத்து.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது இதில் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவர் ஒருவர் எந்த ஆசிரியரையும் மதிக்காமல் பள்ளியில் மற்ற மாணவர்களுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த மாணவரிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி உள்ளது அதன் பிறகு அந்த மாணவர் பள்ளிக்கு வராமல் நேற்று காலை தான் மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளார் ஐந்தாவது பாட வேலை வரை வகுப்பில் இருந்த மாணவர் அதன் பிறகு பள்ளியில் இருந்து வெளியே சென்று சட்டையை கழற்றி விட்டு சாதாரண உடை மற்றும் முக கவசம் அணிந்து மீண்டும் மூன்று 45 மணிக்கு பள்ளிக்கு வந்துள்ளார் அதன்பின்னார் பிளஸ் டூ கணக்கு பதிவியல் வகுப்புக்கு ள் சென்று அந்த மாணவர் அங்கிருந்த மாணவர் அன்புமணி என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது இடுப்பின் பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார் இதை பார்த்த அங்கு வகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் சிவக்குமார் அதிர்ச்சி அடைந்து அந்த மாணவரை தடுக்க முயன்றார் ஆனால் அந்த மாணவர் ஆசிரியர் சிவகுமாரின் தலையிலும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து
தப்பி சென்றார் இதில் ஆசிரியர் சிவக்குமார் மாணவர் அன்புமணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர் உடனே அருகில் இருந்த ஆசிரியர் மாணவர்கள் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர் முதற்கட்ட விசாரணையில் மாணவர் அன்புமணியும் அவரை குத்திய மாணவரும் அருகருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது இருவருக்கும் ஊரில் இருந்து முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று Watching சந்திக்கிறார்கள். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தப்பி ஓடிய மாணவரை தேடி வருகிறார்கள் பள்ளி வகுப்பறையில் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.