கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் டாக்டர் வித்யா (வயது 55) இவர் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று தனது மருத்துவ மனைக்கு செல்வதற்காக சோமனூர் – ஆத்துப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர்டாக்டர் வித்யாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில்புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0