தமிழ்நாடு கண்ணகி குல செட்டியார்கள் பேரவை மற்றும் அனைத்து செட்டியார்களின் அரசியல் சமூக பாதுகாப்பு இயக்கம் இணைந்து புகார் நகரத்து பெரு வணிக செட்டியார்கள் ஐம்பெருங்குழு வணிக கூடல் வாழ்வுரிமை அரசியல் பிரகடன இரண்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பேரவை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமண குமார் வரவேற்புரை ஆற்றிட ஆய்வாளர் திசை ஆயிறத்து ஐநூற்றுவர் ஆய்வு நடுவம் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாபு பத்மநாபன் தலைமை தாங்கினார். மேலும் கருத்துரை வழங்கும் பழந்தமிழ் வணிக ஐம்பெருங்குழு சிறப்பு அழைப்பாளர்களாக சிதம்பரம் காசிநாதன் கண்ணப்பன் நடராஜன் அண்ணாமலை சின்னஞ்செட்டி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த அரசியல் பிரகடன இரண்டாவது மாநில பொது குழு கூட்டத்தில் தமிழ்நாடு கண்ணகி குல செட்டியார்கள் பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பம் மேகமலை மீது சேரமான் காலத்தில் சிலப்பதிகார தெய்வமாகிய கண்ணகிக்கு கட்டிய வரலாற்று கோவிலை மேல் கோடிக்கணக்கான தமிழ் பக்தர்கள் வருடம் முழுவதும் சென்று வழிபடும் வகையில் பலியங்குடி வழியாக பாதை அமைத்தவுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழகத்தில் 2000 ஆண்டுகளாக பழமையான மூவேந்தர்களின் அடையாளச் சின்னமான மங்கள தேவி கண்ணகி கோவிலை மற்றும் தமிழக அரசு கம்பம் மங்கள தேவி அறக்கட்டளையிடம் கோவில் மற்றும் அதற்கான நிலத்தை ஒப்படைக்க கோரியும், தமிழகத்தில் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதில் மத்திய அரசை காரணம் காட்டி புறக்கணிப்பதை ஏற்கமாட்டோம் இந்தியாவின் முதல் சுயமரியாதை கட்சி திராவிட அரசாங்கம் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் மற்றும் செட்டியார்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கிட தமிழக முதல்வருக்கு இந்த பொதுக்குழு கூட்டம் மூலம் கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0