ஒடிசாவில் இருந்துகோவைக்கு லாரி மூலம் கஞ்சா கடத்திய 6 பேர் கைது.

கோவையில் கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்க மாநகர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசாவில் இருந்து கோவைக்கு ஒரு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர்ஆமோஸ் சந்திரன் மற்றும் போலீசார் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் நீலாம்பூர் பைபாஸ் ரோடு ஏ.ஜி .புதூர் அருகே வந்து கொண்டிருந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் மளிகை பொருட்கள் இருந்தது..சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த லாரியில் சல்லடை போட்டு தேடினர் .இதில் உடைமைகளை வைக்கும் இடத்தில் இருந்த ஒரு பையில் 12 1/2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது. தெரியவந்தது .இதை யடுத்து லாரி டிரைவரான கோவை அவ்வை நகரை சேர்ந்த அம்ஜத் கான் ( வயது 23 )என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர் .இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அம்ஜத் கான் அளித்த தகவலின்பேரில் நீலாம்பூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 25 )கேரள மாநில இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ( வயது 22) சேலம் சித்தேஸ்வரன் ( வயது 23) இருகூர் கவுதம் ஜீவா ( வயது 27) பிரவீன் ராஜ் (வயது 22) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் , 6 செல்போன்கள் உள்ளிட்டவை பறி முதல் செய்யப்பட்டது. மேலும் தலை மறைவாக உள்ள ஒடிசாவை சேர்ந்த வாலிபர் மற்றும் இரு கூரை சேர்ந்த சிவக்குமார் ஆகிய 2பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.