ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இக் குறைதீர்ப்பு முகாமில் கூடுதல் காவல் ஆணையாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 40 புகார் மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக் குறை தீர்க்கும் முகாமில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட உதவிக்காவல் ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உட்பட அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இக்குறை தீர்க்கும் சிறப்பு முகாம் தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமையும் நடத்தப்பட்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக துரித விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0