உதகை: உலிக்கல் பேரூராட்சி பெங்காம் எஸ்டேட் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் விதியை மீறி பல மூன்று அடுக்கு கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினரும் உடந்தையாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் எந்த கட்டடத்தையும் முறையாக ஆய்வு செய்வது இல்லை, ஆய்வு செய்து முறைப்படி ஒப்புதல் சான்றிதழ் வழங்குவதில்லை என பகுதி மக்கள் கூறுகின்றன, மாறாக ஆதாயம் பெற்றுக் கொண்டு சான்றிதழ் வழங்குவதாக கூறப்படுகிறது, அப்பகுதியில் பல கட்டடங்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளது இதனால் மழைக்காலங்களில் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதை அரசு கவனிக்காமல் நம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, மேலும் நீரோடை அருகில் பெரிய கிணறு பாதுகாப்பற்ற முறையில் தோண்டப்பட்டுள்ளது, கடந்த வாரத்தில் ஒரு காட்டு மாடு விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது இது சம்பந்தமாக வனத்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுபோல அனுமதி இல்லாமல் கிணறு தோண்டுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை, குறிப்பு (கடந்த வாரம் காட்டுமாடு விழுந்து அதை அங்கு பணி புரியும் ஊழியர்கள் எடுத்து அதை என்ன செய்தார்கள் என்று கூட தெரியவில்லை பகுதி மக்கள் கூறுகின்றன வனத்துறையினர் , விலங்குகள் கிணறில் விழுந்து பலியாகுவதை ஆய்வு மேற்கொண்டார்கள் என்பது கூட சற்று கேள்வி குறியாகி உள்ளது, இது போன்ற சம்பவங்களை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்குமா ஏனெனில் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு வனத்துறை மட்டுமல்ல பொதுமக்களும் என்பது நாம் யாவரும் அறிய வேண்டும்,
உலிக்கல் பேரூராட்சி கவனம் செலுத்தாததே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆகியுள்ளது தன் ஆர்வலர்கள் எச்சரிக்கை??
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0