கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப் பாலம் வரை மேம்பாலம் ரூ 480 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து வாலாங்குளம் பகுதியில் இறங்குதளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது .உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மற்றும் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மேம்பாலம் ஏறு தளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து விட்டது. இந்த பகுதியை போக்குவரத்துக்கு திறந்து விடலாம்என்று நெடுஞ்சாலை துறை சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்கடம் அரசு பஸ் டிப்போ அருகில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை கண்காணிப்பு என்ஜினியர் ரமேஷ் நேற்று ஆய்வு செய்தார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- இந்த பணிகளை அடுத்த மாதம் ஆகஸ்ட் 31 -ம் தேதிக்குள் முடிக்க கால அவகாசம் உள்ளது. ஆனாலும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம். என்றனர். உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் இந்த மேம்பாலம் எப்போது திறக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0