ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்த குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு துறை மற்றும் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ட்ரீம் சோன் சார்பாக கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு விழா
இவ்விழாவிற்கு ஆடை வடிவமைப்புத் துறை தலைவி டி ஷாலினி வரவேற்புரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் அ .மோகனசுந்தரம் அவர்கள் கைத்தறியின் அவசியத்தை பற்றியும் அதில் மாணவர்களின் முக்கிய பங்கினை பற்றியும் எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் ட்ரீம் சோன் மையத் தலைவர் ஆதவன் அவர்கள் கைத்தறியின் வரலாற்றையும் அதன் பயன்பாடுகள் பற்றியும் கூறினார்.
பின்னர் சிறப்பு விருந்தினரை பற்றி உதவிப் பேராசிரியர் திருமதி கே.தேன்மொழி அவர்கள் சிறப்பு விருந்தினரை பற்றி அறிமுக உரையாற்றினார்.
பிறகு சிறப்பு விருந்தினர் திருமதி ஷர்மிளா ராம் ஆனந்த் அவர்கள் கைத்தறியின் பாரம்பரியம் பற்றியும் தமிழ்நாட்டில் கைத்தறியின் வரலாறு மற்றும் உபயோகத்தை பற்றியும் கூறினார்.
அதன் பின்னர் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தி வெவ்வேறு விதமான வடிவில் ஆடைகள் உடுத்தி அதை வெவ்வேறு விதங்களில் அணிந்து ஒய்யாரமாய் நடந்து தங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியானது கைத்தறி இளவரசன் மற்றும் கைத்தறி இளவரசி என்பதற்கான போட்டித்தேர்வு நடைபெற்றது.
அதிலிருந்து நடை, உடை, பாவனை, கைத்தறி பற்றி சிறப்பான விளக்கம் அளித்த மாணவர் திரு கோகுல கண்ணன் மற்றும் மாணவி செல்வி ஹரிணி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கும் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஆடை வடிவமைப்புத் துறை தலைவி திருமதி.டி ஷாலினி மற்றும் உதவி பேராசிரியர்கள் திருமதி கே தேன்மொழி, திருமதி பி அனிதா, திருமதி இராஜா சாதனா மற்றும் தா நித்யா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.