தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டமான உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம். மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மக்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் சூலூர் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேர ஆய்வுப் பணிகள் மக்களின் தேவைகள் அரசு அலுவலகங்களில் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகள் தேவைகள் குறித்த நேரடி கள ஆய்வு கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார்பாடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த ஆய்வுப் பணியில் மாவட்ட அளவிலான அரசுத் துறை உயர் அதிகாரிகள் சூலூர் வட்டத்துக்குட்பட்ட பேரூராட்சிகள் ஊராட்சிகள் கிராமங்கள் தோறும் நேரடியாக மக்களை சந்தித்தும் அரசு அலுவலங்களில் ஆய்வு மேற்கொண்டும் அப்பகுதிகளின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்று மேலும் அவர்கள் செய்த ஆய்வின் அடிப்படையில் விபரங்களை தயாரித்து அதற்குண்டான உடனடி தீர்வினை அந்தந்த பகுதி அலுவலர்களிடம் தெரிவித்து நிவர்த்தி செய்திடவும் துறை சார்ந்த கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்து அதற்குண்டான தீர்வினை செயல்படுத்திட இந்த திட்டம் சூலூர் வட்டம் பகுதியில் நடைபெற்றது. இந்தஆய்வு பணியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளிகள், அங்கன்வாடிகள், கூட்டுறவு வங்கிகள், சேமிப்புக் கிடங்குகள், காலை, மதியம் உணவு திட்டம் செயல்பாடுகள், கால்நடை மருத்துவமனைகள், துணை சுகாதார மகப்பேறு நிலையங்கள், இசேவை மையம், ரேஷன் கடைகள், அரசு திட்டப்பணிகள், பூங்காக்கள், திடக்கழிவு, சார் பதிவாளர் அலுவலகம், காவல்துறை, தீயணைப்பு துறை, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், நீர் திறக்கப் பகுதிகள் குளம் குட்டைகள், குடிநீர் தொட்டிகள், மழைநீர் நீர்வழிப் பாதைகள் ஆகியவற்றை நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் மக்களின் கோரிக்கை, சமூக நல அமைப்புகளின் கோரிக்கை, மனுக்களை பெற்றுக் கொண்டு சுமார் 40க்கு மேற்பட்ட வீட்டு பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0