வால்பாறையில் கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சார்பாக வால்பாறை அரசு கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம், நகராட்சி ஆணையாளர் விநாயகம் ஆகியோர் ஆலோசனைக்கு இணங்க, நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் குப்பைகளை பிரித்து வழங்குவதன் மூலம் அவற்றை எவ்வாறு உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் அவைகள் எவ்வாறு மறுசுழற்சிக்கும் மறு பயன்பாட்டிற்கும் அனுப்பப்படுகிறது என்பது பற்றியும் எடுத்துரைத்தார் மேலும் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார் அதைத்தொடர்ந்து அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றனர்
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன், பேராசிரியர் பெரியசாமி, வணிகவியல் துறை தலைவர் ராஜகோபால், வணிகவியல் உதவி பேராசிரியர்முனைவர் மகேஷ்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர் வெகுசிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் துளசிமணி, கார்த்திகேயன், நந்த சுப்ரமணியன், மேற்பார்வையாளர் ராம்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.