கோயம்புத்தூர்: உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் & கோயம்புத்தூர் மாநகரில் தனது 3வது புதிய ஷோரூமை இன்று ஆர் எஸ் புரத்தில் திறந்துள்ளது. இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி,புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன் K.அர்ச்சுணன் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர். R.தமிழ்வேந்தன் (பதிவாளர் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்), டாக்டர். P.கிருஷ்ணகுமார் (செயலாளர் தலைமை செயல் அதிகாரி நேரு கல்வி குழுமம்), மற்றும் திரு.யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர்), திரு.சபீர் அலி (மலபார் கோல்டு தமிழ்நாடு மண்டல வணிக தலைவர்). திரு.நௌசாத் (மலபார் கோல்டு தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர்). திரு.அனீஸ் ரஹ்மான் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கோவை ஆர் எஸ் புரம் கிளை தலைவர்) மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 13 நாடுகளில் 350-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி. மயிலாடுதுறை. புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர் ஆகிய நகரங்களில் கிளைகளை கொண்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0