சென்னை: பழங்கால சாமி சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிலை திருட்டு தடுப்பி பிரிவின் 13 சரகங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது இந்நிலையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவின் திருச்சி சரக தனிப்படையானது கடந்த6.7.2024ம் தேதி தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தஞ்சை பெரியார் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த tn 52m1563 என்ற பதிவெ ன் கொண்ட நிசான் டோ ரோனா காரை சோதனை செய்தது இந்த சோதனையின் போது காரின் டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்த 2 பேரையும் விசாரணை செய்ததில் காரை ஓட்டி வந்தவர் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ் கண்ணன் வயது 42 என தெரிய வந்தது உடன் வந்தவர்களில் ஒருவர் மயிலாடுதுறை மாவட்டம் கொருக் கையைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் லட்சுமணன் வயது 64 என்பதும் அவர் காரினை ஓட்டி வந்த ராஜேஷ் கண்ணனின் நண்பன் என்பது ம் மற்றொருவர் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் திருமுருகன் வயது39 என்பதும் அவர் லட்சுமணனின் மருமகன் என்பது தெரிய வந்தது அவர்கள் மூவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர் மேற்படி காரினை சோதனை செய்ததில் காரின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 சாக்கு பைகளை கைப்பற்றி அதனை திறந்து பார்த்த போது அவற்றில் 1. திரிபுரந்தகர் 2. வீணா தர தட்சிணாமூர்த்தி 3.ரிஷப தேவர்4. அம்மன் தேவி சிலைகள் 3 என மொத்தம் ஆகிய 6 உலோ க சாமி சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அது குறித்து விசாரணை செய்ததில் மேற்படி 6 சிலைகளும் 5 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் கொரு ருக் கை கிராமத்தில் உள்ள லட்சுமணனின் வீட்டின் கட்டுமானத்தின் போது தோண்டிய குழியில் இருந்து கிடைத்துள்ளதும் அது குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தாமல் வேண்டுமென்றே மறைத்து அதனை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது லட்சுமணன் இது குறித்து தனது நண்பரான ராஜேஷ் கண்ணனுக்கும் மருமகனுக்கும் சொல்லி உள்ளார் அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கொ ருக் கை கிராமம் வந்து மேற்படி சிலைகளை பார்த்துள்ளனர் அதன்பின் மேற்படி சிலைகளை வெளி நாட்டிற்கு கடத்தி விற்றால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்று திட்டம் போட்டுள்ளனர் நல்ல பார்ட்டியாக பார்த்து அதிக பணம் கிடைக்கும் போது விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து சிலைகளை அங்கேயே மறைத்து வைத்து விட்டனர் இந்நிலையில் ராஜேஷ் கண்ணனுக்கு மேற்படி சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்னைத் தொடர்ந்து ராஜேஷ் கண்ணன் மற்றும் திருமுருகன் ஆகியோர் கொருக் கையில் உள்ள லட்சுமணன் வீட்டுக்கு கடந்த 5.7.2024ம் தேதி அன்று இரவு காரில் சென்றுள்ளனர் மறுநாள் காலை 6 சிலைகளையும் எடுத்துக்கொண்டு விற்பனை செய்ய அதே காரில் திருச்சி வழியாக சென்னைக்கு வந்துள்ளனர் இந்நிலையில் மேற்படி காரினை சோதனை செய்த திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு மேற் படி சிலைகள் குறித்தும் அதனை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் குறித்தும் மேற்படி நபர்களிடம் விசாரணை செய்துள்ளனர் மேற்படி நபர்களிடம் விசாரணை செய்தனர் மூவரும் மேற்படி சிலைகளை வைத்திருப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை எனவே மேற்படி 6 சிலைகளும் தனிப்படை போலீசாரால் கைப்பற்றப்பட்டது திருச்சி சரக காவல் படை ஆய்வாளர் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய குற்ற எண் 6/2024ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர் மேற்படி சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்தும் இதில் வேறு நபர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0