திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரம் காவல் துணை ஆணையர் தெற்கு அவர்களின் அறிவுரையின் படியும் கே.கே.நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம் குடிசைப் பகுதி சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த 30 சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு விளையாட்டு மற்றும் படிப்பு சம்பந்தமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கேகே நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ச.பாலகிருஷ்ணன் அவர்கள் அண்ணா அறிவியல் கோளரங்கம் மையத்திற்கு வெளி நிகழ்ச்சிக்காக உரிய பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டன. வருங்காலத்தில் அவர்களின் சமுதாய நல்வரவுகளை மற்றும் நல்லொழுக்கங்களைவளர்ச்சிகளை பேணிக்காக்க மாநகர காவல் ஆணையர் அவர்கள் காவலர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். இது போன்ற உதவிகளை குழந்தைகளுக்கு காவலர்கள் வழங்கி வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
திருச்சியில் குடிசை பகுதியில் வசிக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு கல்வி உதவி வழங்கும் காவல் துறையினர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0