கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிரபாகரன் (வயது 32) இவர்சொந்தமாகசரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு ஒட்டி வந்தார். இவர் நேற்று காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செட்டிப்பாளையம் – சித்தூர் ரோடு பனப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் திடீரென்று பிரபாகரின் கழுத்தில் அரிவாளால் சரமரியாக வெட்டியது.இதில் பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் டிரைவர் இருக்கையிலே இறந்தார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நெகமம் போலீசார் சம்பவ இடத்துக்கவிரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள். போலீஸ் துப்பறி நாய் கொண்டு செல்லப்பட்டது அது அந்த பகுதியில் உள்ள காட்டுக்குள் சிறிது தூரம் ஓடியது யாரையும் பிடிக்கவில்லை .கொலையாளிகளைப் பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்உத்தரவின் பேரில் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முன் விரோதம்காரணமாக யாராவது இவரை கூட்டிச்சென்று சென்று கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0